பெரம்பலூர் மாவட்டம் காரியானூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், கதிர்வேல், செந்தில், குமார், அழகுதுரை ஆகிய ஐந்து நபர்கள், லட்சுமணபுரம் வெள்ளாற்றில் அரசு அனுமதி இன்றி பொலிரோ மினி லாரியில் மணல் திருடியபோது இராமநத்தம் காவல் ஆய்வாளர் செல்வ விநாயகம் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மணல் திருட பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.