பெண்ணாடம் அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

1பார்த்தது
பெண்ணாடம் அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே இறையூர், தொளார் கைகாட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், மொபட்டில் வந்த வேல்முருகன் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர் கூடலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் வேல்முருகன் (40) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி