கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தெற்கு வழுதலம்பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாள் (26) என்பவர் வீட்டில் சமையல் செய்ய ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பற்றி எரிந்துள்ளது. வலியால் அலறிய அவரை அவரது கணவர் சத்திய பிரபாகரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.