வேப்பூர்: மணல் கடத்திய 3 பேர் கைது

313பார்த்தது
வேப்பூர்: மணல் கடத்திய 3 பேர் கைது
வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் ஆதியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் கோமுகி ஆற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டிகளில் வந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ஆதியூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குணசேகரன் (வயது 31), நாவான் மகன் முருகேசன் (62), சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (36) ஆகியோர் என்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி