வேப்பூர் அடுத்த கழுதூரைச் சேர்ந்த சந்திரா (56) என்பவர், சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் மோதியதில் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து செல்லும்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.