வேப்பூர்: பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

633பார்த்தது
வேப்பூர் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் சி. பி. எஸ். இ பள்ளியில் நேற்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. வகுப்பு முடிந்ததும் பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிய மாணவர்கள், சேப்பாக்கம் ஏரிக்கரையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 வயது மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி