கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட விநாயகநந்தல் கிராமத்தில் OHT வாட்டர் டேங்க் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன் இந்த விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.