பெண்ணாடம் அடுத்த கீழநெமிலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வகுமார், கடந்த 11 ஆம் தேதி மொபட்டில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செல்வகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி புஷ்பா அளித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.