
கம்மாபுரம்: வேன் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் சாலையை கடக்க முயன்ற ஆறுமுகம் (60) என்ற முதியவர் மீது விருத்தாசலம் நோக்கி வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்தார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.































