கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இன்று (மே 23) காலை 8.30 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 16 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலையூர் மாத்தூர் பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும், காட்டுமயிலூர் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழை பதிவாகவில்லை.