கடலூர்: பனை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

550பார்த்தது
கடலூர்: பனை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பில்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் (40), வீட்டின் பின்புறம் உள்ள பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டும்போது தவறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி