கம்மாபுரம்: புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

890பார்த்தது
கம்மாபுரம்: புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வி. குமாரமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிக் கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராகவன் மனைவி கனகம் (56) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி