கருவேப்பிலங்குறிச்சி: இளநீர் வியாபாரியை தாக்கியவர் கைது

3பார்த்தது
கருவேப்பிலங்குறிச்சி: இளநீர் வியாபாரியை தாக்கியவர் கைது
கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி சஞ்சீவ் காந்தி, மளிகை பொருட்கள் வாங்கச் சென்றபோது, மோகன் மகன் மினிய பிரிஜின் என்பவர் அவரை வழிமறித்து, இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதாகக் கூறி திட்டி, இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த சஞ்சீவ் காந்தி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிய பிரிஜினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி