கொத்தட்டை: சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம்

325பார்த்தது
கொத்தட்டை: சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம்
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலை பாலம் பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே எருக்கன் காட்டுபடுகை பகுதியில் சுமார் 20 அடி நீளத்திற்கு இணைப்பு சாலை திடீரென உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாகை நோக்கி செல்லும் வாகனங்கள் வல்லம்படுகை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. உள்வாங்கிய இணைப்பு சாலை சீரமைக்கப்படும் வரை கொத்தட்டை சுங்க சாவடியில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி