M. பருர்: கலையரங்கம் அமைக்க எம்எல்ஏ அடிக்கல்

54பார்த்தது
M. பருர்: கலையரங்கம் அமைக்க எம்எல்ஏ அடிக்கல்
விருத்தாசலம் ஒன்றியம் M. பருர் ஊராட்சியில் கலையரங்கம் அமைக்க விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூபாய் 8 இலட்சம் மதிப்பீட்டில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில்விருத்தாசலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கனக. கோவிந்தசாமி, திமுக ஒன்றிய துணை செயளாலர் தர்ம. மணிவேல், விருத்தாசலம் வடக்கு வட்டார தலைவர் இராவணன், விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மதியழகன், பரமேஸ்வரி மோகன், திமுக மாவட்ட பிரதிநிதி எடையூர் சிவகுமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி