விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை முல்லை நகர் 3 வது தெருவைச் சேர்ந்த மேற்பார்வையாளர்
பிரபு (50) வீட்டில் கடந்த 21 ஆம் தேதி இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை அவரது மனைவி செல்வராணி வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சோதனையில், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 31 கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து
பிரபு அளித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.