மேலப்பாளையூர்: மனைவி காணவில்லை என கணவர் புகார் அளிப்பு

518பார்த்தது
மேலப்பாளையூர்: மனைவி காணவில்லை என கணவர் புகார் அளிப்பு
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (48) என்பவரின் மனைவி சுந்தரி (38) கடந்த 22 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. 14 வருட திருமண வாழ்வில் ஒரு மகன், மகள் உள்ள சுந்தரி, விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி