விருத்தாசலம்: நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் விருத்தாசலம் நவாப் ஜாமியாமஸ்ஜித் பள்ளிவாசலில் மாவட்ட தி. மு. க. சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்தார் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.