குறிஞ்சிப்பாடி மற்றும் மேலப்பாளையூர் துணை மின் நிலையங்களில் இன்று, 26 ஆம் தேதி, பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சிப்பாடி பகுதி சாவடி, எஸ். கே. எஸ். நகர், கே. கே. நகர், வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, கஞ்சமநாதன்பேட்டை, சித்தாலிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். இதேபோல், மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலப்பாளையூர், ஏ. வல்லியம், சி. கீரனுார், மருங்கூர், க. தொழூர், காவனூர், தே. பவழங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு. கீனனூர், கொடுமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.