கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எம். பட்டி கிராமத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் சிறப்பு கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம், நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை பாலா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி. வெ. கணேசன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.