கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடியைச் சேர்ந்த ராஜதுரை (25) என்பவர், நேற்று முன்தினம் வேப்பூர் - விருத்தாசலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.