கடலூர்: கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

81பார்த்தது
கடலூர்: கார் மோதி 3 பேர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாதயாத்திரை செல்லும்போது கார் மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வரதராஜபேட்டையில் இருந்து மேல்நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் ஆலயத்துக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். பாதயாத்திரை செல்லும்போது கார் மோதியதில் இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாயமேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி