கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நேற்று இரவு கோவிலின் ஐந்து கோபுரங்களும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தன. ராஜகோபுரத்தின் மேல் பிறை தோன்றிய ரம்மியமான காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.