விருத்தாசலம்: ஓடையில் முதியவர் பிணம்

877பார்த்தது
விருத்தாசலம்: ஓடையில் முதியவர் பிணம்
விருத்தாசலம் வீராரெட்டிக்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஆபெல் (60) என்பவர் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. திருவிழா நடப்பதால் கணவர் அங்கு சென்றிருப்பார் என நினைத்த மனைவி அவரை தேடவில்லை. இந்நிலையில், மாதா கோவில் அருகே உள்ள ஓடை பாலத்தின் அடியில் ஆபெல் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி