கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவில் கடந்த 5 ஆம் தேதி 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது அடையாளம் தெரியாததால், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்து பிணவறையில் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை விருத்தாசலம் நகராட்சி நிர்வாக உதவியுடன் மணிமுக்தாற்றில் அந்த முதியவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.