விருத்தாசலம்: பெண் போலீஸ் ஏட்டை தாக்கிய வியாபாரி கைது

786பார்த்தது
விருத்தாசலம்: பெண் போலீஸ் ஏட்டை தாக்கிய வியாபாரி கைது
விருத்தாசலம் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணிபுரியும் திலகவதி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது போக்குவரத்தை மாற்றிவிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மாற்று வழியில் செல்லுமாறு கூறியபோது, முட்டை வியாபாரி முஜிபுர் ரஹ்மான் (36) அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து திலகவதி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் முட்டை வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி