சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.