விருத்தாசலம்: அகல் விளக்கு தயாரிக்கும் குடோனில் தீ விபத்து

753பார்த்தது
விருத்தாசலம்: அகல் விளக்கு தயாரிக்கும் குடோனில் தீ விபத்து
விருத்தாசலம் அருகே நாச்சியார்பேட்டையில் தேவதாஸ் என்பவருக்குச் சொந்தமான அகல் விளக்கு தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தேவதாஸ் திரும்பி வந்தபோது குடோன் எரிவதைக் கண்டு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தொடர்புடைய செய்தி