விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பிரபாகரன், கடந்த ஜூலை மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து ஊரக நல அலுவலர் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.