விருத்தாசலம் எம்எல்ஏ பிரமலதா விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமிக்கு தேமுதிக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை அமைத்துள்ள ரங்கசாமி, மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.