விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சிலர் கடைகள் மற்றும் வீடுகள் கட்டியிருந்தனர். இது தொடர்பாக தனிநபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் முடிவில், கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், நேற்று 20க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.