விருத்தாசலம் அருகே, உதயகுமார் (69) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட தேக்கு மரங்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. இதில் பெரும்பாலான மரங்கள் எரிந்து சாம்பலானதால், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உதயகுமார் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மரங்களுக்கு தீ வைத்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.