விருத்தாசலம்: கணக்கில் வராத 2. 22 லட்சம் ரூபாய் பறிமுதல்

2பார்த்தது
விருத்தாசலம்: கணக்கில் வராத 2. 22 லட்சம் ரூபாய் பறிமுதல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2.22 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. லஞ்ச ஒழிப்புப்பிரிவு டி.எஸ்.பி (பொறுப்பு) அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் உள்ளிட்ட போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி