கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெற்கு கோபுரத்தின் கீழே நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அவரது சடலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வி. ஏ. ஓ ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.