ஒடிசா மாநிலம் மாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த திப்பு சிங் என்பவரின் மனைவி சிமான் சிங், விருத்தாசலம் பெரிய கண்டியாங்குப்பம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று முன்தினம் சிமான் சிங் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கணவர் திப்பு சிங் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.