கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்புகள் முடிந்த பின்னர் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். விருத்தாசலம் - பெண்ணாடம் சாலையில் வந்தபோது ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.