விருத்தாசலம்: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

65பார்த்தது
விருத்தாசலம்: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் பரவலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஆதிமூலம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ஆதிமூலம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அவருடைய மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.