விருத்தாசலம் ஆலடி ரோடு எம். ஆர். கே. நகர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (36) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே வந்த பன்றி மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.