விருத்தாசலம்: மணல் கடத்தல்; 2 டிராக்டர்கள் பறிமுதல்

1பார்த்தது
விருத்தாசலம்: மணல் கடத்தல்; 2 டிராக்டர்கள் பறிமுதல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குருவன்குப்பம் வனப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பிச் சென்றனர். இருப்பினும், போலீசார் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பதிவு எண் இல்லாத 2 டிராக்டர்களைப் பறிமுதல் செய்து, தப்பிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி