விருத்தாசலம்: லாரியில் கூழாங்கற்கள் கடத்தல்

788பார்த்தது
விருத்தாசலம்: லாரியில் கூழாங்கற்கள் கடத்தல்
விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் காட்டுக்கூடலூர் மீன் மார்க்கெட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு லாரியை மறித்து சோதனை செய்ததில், அதில் சட்டவிரோதமாக கூழாங்கற்கள் விற்பனைக்காக கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கூழாங்கற்கள் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி