விருத்தாசலம் வனத்துறை சார்பில் உலக வன நாள் மற்றும் உலக தண்ணீர் தினம் முன்னிட்டு இந்த வருட கருத்துரு உணவு மற்றும் வனம் - ஒரு சிறந்த உலகத்திற்கான புதிய தீர்வுகள் ஆகியவற்றின் படி மரக்கன்றுகள் நடும் விழாவானது விருத்தாசலம் பகுதிகளின் பல்வேறு இடங்கள், விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் சாத்தமங்கலம் கிராமத்தின் சாலை ஓரங்களில் இருபுறமும், கார்குடல் கிராமத்திலும், வேப்பூர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 500 மரக்கன்றுகள் நடப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு, வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுதல் மற்றும் வன நாளின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் ரா. ரகுவரன் தலைமையில், தஞ்சாவூர் டாக்டர். எம். எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி மாணவர்கள், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், கார்கூடல் ஊர் பொதுமக்கள் மற்றும் வனவர் சஞ்சீவி, வனக்காப்பாளர் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் பங்கேற்றனர்.