விருத்தாசலம்: பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

2பார்த்தது
விருத்தாசலம்: பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
விருத்தாசலம் அடுத்த கோ. பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி (36) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பொன்னேரி அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி