சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் 18 வயது இளம்பெண் யான்சி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.