"டிட்வா" புயல் பாதிப்பு: 2.76 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கிய மாநகராட்சி

26பார்த்தது
"டிட்வா" புயல் பாதிப்பு: 2.76 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கிய மாநகராட்சி
'டிட்வா' புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சி பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.03) ஒரே நாளில் 2,76,400 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி