டிட்வா புயலால் தமிழ்நாட்டில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் புயல் வெள்ளத்தில் சிக்கி 582 கால்நடைகள் பலியாகியுள்ளன என கூறப்பட்டுள்ளது. 601 குடிசை / வீடுகள் சேதமான நிலையில், 85,521.76 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் KKSSR இராமச்சந்திரன் கூறியுள்ளார்.