தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (பிப்., 13) லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். தொடா்ந்து பிப்.,14 முதல் பிப்., 17 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.