சிலிண்டர் தட்டுப்பாடு.. ரயில்களில் உணவு சேவை நிறுத்தப்பட வாய்ப்பு

29பார்த்தது
சிலிண்டர் தட்டுப்பாடு.. ரயில்களில் உணவு சேவை நிறுத்தப்பட வாய்ப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவையை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்களில் பயணிகளுக்காக தினசரி புதிய உணவுகள் வழங்கப்படும் நிலையில், சமையலுக்கு தேவையான எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்பிஜி தட்டுப்பாடு தொடர்ந்தால் இந்த சேவையை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி