சமையல் சிலிண்டர் தடுப்பாட்டால் நாளை (மார்ச் 10) முதல் ஹோட்டல்கள் இயங்காது என பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு எரிபொருள் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக, ஹோட்டல்கள் சங்கத்தினர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.