மக்களின் தாகத்தை தீர்க்க தமிழகம் முழுவதும், தவெக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோச்சடை பகுதியில் அமைக்கப்பட்ட கோடைகால தண்ணீர் பந்தலை சேதப்படுத்தி, பேனரை கிழித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தொண்டர்கள், இதற்கு காரணமானவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.