தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும்.. முதல்வர்

6309பார்த்தது
திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வடக்கிலிருந்து வரும் என்.டி.ஏ ஆபத்தைத் தடுக்கும் தேர்தல் இது என்றார். டெல்லிக்குத் தமிழ்நாடு எப்போதுமே 'அவுட் ஆஃப் கண்ட்ரோல்' தான்; எனவே மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும். தன் பதவியைக் காக்க மாநில உரிமைகளை விற்று, பாஜக கிளைச் செயலாளராக இ.பி.எஸ் செயல்படுகிறார். அவர் துணையோடு இங்கு என்.டி.ஏ ஆட்சி அமைத்து இந்தியைத் திணிக்க பாஜக முயல்கிறது என்று கடுமையாக விமர்சித்தார். நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி